tamilnadu

எல்பிபி கால்வாயில் தேங்காய் நார் ஆலைக்கழிவு அமைத்து தர தமுஎகச திருப்பூர் மாநாடு வலியுறுத்தல்

எல்பிபி கால்வாயில் தேங்காய் நார் ஆலைக்கழிவு அமைத்து தர தமுஎகச திருப்பூர் மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், அக்.13- திருப்பூர் மாவட்டத்தில் கலை  நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு  உள்ளாட்சி நிர்வாகங்கள் அரங் கங்கள் அமைத்து தர வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட மாநாடு வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்க திருப்பூர்  16 ஆவது மாவட்ட மாநாடு தாரா புரத்தில் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலை இலக்கிய அறிக்கையை மாவட்டத் தலை வர் பி.ஆர்.கணேசன், பண்பாட்டு அறிக்கையை மாநிலக் குழு உறுப்பினர் கோவை சதாசிவம், அமைப்பு நிலை வேலை அறிக் கையை மாவட்டச் செயலாளர் ஆர். குமார் ஆகியோர் முன்வைத்தனர்.  இதில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு நிர்வாகங்கள் அரங்கங்கள் அமைத்து தர வேண் டும். மகாகவி பாரதி பெயரில் கலை  இலக்கிய அரங்கம் அமைக்க வேண்டும். தாராபுரம் அரசு பெண் கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சிறுபான்மை மக்கள் திருமண நிகழ்விற்கு மண்ட பங்கள் தருவதற்கு திருமண மண் டப உரிமையாளர்கள் மறுக்கும் நிலை உள்ளது. எனவே பிரச் சனைக்கு மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு அனைவருக்கும் திருமண மண்டபங்கள் தருவதை உறுதிப் படுத்த வேண்டும். கரூர் நிகழ் வினை காரணம் காட்டி கலை இலக் கிய அமைப்புகளின் செயல்பாடு களுக்கு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்துவதற்கு காவல்துறை அனு மதி மறுப்பதை கண்டித்தும், திரு முருகன்பூண்டியில் அரசு சிற்பக் கலை கல்லூரி அமைக்கவும், நூல கங்களில் வாங்கப்படும் நூல் களை தேர்வு செய்வதில் வெளிப் படை தன்மையை கடைப்பிடிக்க  வேண்டும். அமராவதி ஆற்றுப்  பகுதியில் வரலாற்றுச் சின்னங் களை பாதுகாக்க வேண்டும். வர தட்சணை அடிப்படையில் ஆடம்பர  திருமணங்கள் நடத்தி, பெண்களை  தற்கொலைக்கு தள்ளக்கூடிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிர்வாகிகள் மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக க.சம்பத்குமார், செயலாள ராக பி.ஆர்.கணேசன், பொருளாள ராக மு.திருப்பதி, துணைத் தலை வர்களாக மா.நாட்ராயன், கீ.சீரங் கராயன், இ.அங்குலட்சுமி, எஸ். ஏ.காதர், துணைச் செயலாளர்க ளாக தோழன் ராஜா, தினகரன்,  மைதிலி நிதர்சனா, கவி உழவன்  உட்பட 17 பேர் கொண்ட செயற்குழு வும், 51 பேர் கொண்ட மாவட்டக் குழு வின் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டது. இத்துடன் மாநில மாநாட் டுக்கான பிரதிநிதிகள் தேர்வு செய் யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் நிறைவு ரையாற்றினார்.