tamilnadu

img

எடப்பாடியின் துவேஷ பேச்சு திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடியின் துவேஷ பேச்சு திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 14- கோவையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை காவு வாங்க எண்ணும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிச்சாமி மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவை  டாடாபாத்  பகுதியில் தி.மு.க மாணவர் அணியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் கணபதி ப.ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி நா. கார்த்திக்,  தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.