tamilnadu

img

ரேசன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை, அக்.22-  ரேஷன் கடை ஊழியர் களுக்கு 20% போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.  அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின்  கீழ் இயங்கும் நிறுவனங் களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சத வீத போனஸ் வழங்கப்பட வுள்ளதாக தமிழக அரசு திங்களன்று அறிவித்துள் ளது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் கிடைக்கும். அதேபோல், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20  சதவீதம் போனஸ் வழங்கப் படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது. அதன்படி அதி கபட்சமாக ரூ.7 ஆயிரம்  வரை போனஸ் பெறுவார் கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.