tamilnadu

img

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி

தருமபுரி, ஆக.1- ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைய தொடங்கிய நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அனுமதி அளித் துள்ளார். கர்நாடகா மற்றும் கேர ளம் மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரண மாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள்  நிரம்பின. இதனால் அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி வரை உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் வியாழனன்று நிலவரப்படி விநாடிக்கு 28 ஆயிரம் கன அடி யாக இருந்த நீர்வரத்து, வெள்ளியன்று காலை நிலவரப் படி விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததது.  தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வ தற்கு 5 நாட்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனு மதி அளித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்ப தற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. காவிரி கரை யோர பகுதிகளில் வருவாய்த்துறையினர், காவல் துறையி னர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.