அக். 10-ஆம் தேதிக்குள் ரேசன் பொருட்கள் விநியோகம்
சென்னை, அக். 2 - தமிழகத்தில் உள்ள 2 கோடியே 27 லட்சத்து, ஆயிரத்து 260 குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறுகின்றனர். குறிப்பாக தீபாவளி காலத்தில் பச்சரிசி மற்றும் பாமாயிலுக்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கும். மேலும், பலரும் அந்த பண்டிகையை கொண்டாடு வதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால், அவர்கள் நேரத்திற்கு முன்பே தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதி கிடைக்க வேண்டும் என்பதாலும் பொதுமக்கள் ரேசன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்க்கும் விதமாகவும், அக்டோபர் 20-ஆம் தேதி வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த மாதம் முழுவதற்கு மான ரேசன் பொருட்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் ஒரே கட்டமாக வழங்கப்படும் என்று அரசுஅறிவித்துள்ளது.
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
சென்னை, அக். 2 - செப்டம்பரில், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில் கண்காணிப்பு கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில், கடந்த செப்டம்பரில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், நாகை, சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் இரங்கல்
சென்னை , அக். 2 - ரகுராம் ராஜனின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளி யிட்டுள்ளார். “இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், நமது (தமிழக அர சின்) பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜனின் தந்தையும், இந்திய உளவுத்துறை யில் சிறப்பாகப் பணி யாற்றிய அதிகாரியுமான ராகவாச்சாரி கோவிந்த ராஜன் மறைந்த செய்தி யறிந்து வருத்த மடைந்தேன். தந்தை யாரை இழந்து தவிக்கும் ரகுராம் ராஜனை தொடர்பு கொண்டு அவ ருக்கும் அவரது குடும்பத் தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் தேன்” என்று தெரிவித்து ள்ளார்.
அதிகாரிகளுடன் ஐஜி ஆலோசனை
கரூர் , அக். 2 - கரூர் வேலுச் சாமி புரம் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர் பாக தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து, அதி காரிகளுடன் ஐஜி ஜோஷி நிர்மல் குமார் ஆலோச னையில் ஈடுபட்டார். அடுத்த கட்ட நடவடிக்கை கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஐஜி ஆலோசனை நடத்தி னார்.
பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே. மணியின் மகன் நியமனம்
விழுப்புரம் , அக். 2 - பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸ் மற்றும் அன்பு மணி ஆகியோர் தனித்த னியாக அவர்களின் ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நிய மித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக வின் இளைஞரணி தலை வராக, கட்சியின் கவு ரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரனை நியமித்து ராமதாஸ் வியாழக் கிழமை அறிவித்துள் ளார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், நியமனக் கடிதத்தை ராமதாஸும், அவரது மூத்த மகள் காந்திமதி யும் இணைந்து தமிழ்க்கும ரனுக்கு வழங்கினர்.