திருவண்ணாமலை,பிப்.5- தெள்ளாறு அருகே பென்னாட கரன் என்ற கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த 4 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா, சரவணன் உள்ளிட் டோர் அடங்கிய குழுவினர் வந்த வாசி அருகேயுள்ள தெள்ளாறு பகுதியில் நடத்திய ஆய்வில் பென்னாடகரன் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே 2 சிலைகளை கண்டறிந்தனர். அதில், ஒன்று விஷ்ணு சிலை மண்ணில் பாதி புதைந்திருந்தது. நான்கு கைகளுடன் மேல் வலது கையில் பிரயோக சக்கரமும், மேல் இடது கையில் சங்கும், கீழ் வலது கையில் அபய முத்திரையும், கீழ் இடது கையில் கடி முத்திரையில் இடையின் மீது வைத்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் பட்டையான சரப் பளியும், தோளில் இருந்து சரிந்து மார்பின் மீது பரவி பின் வலது கைக்கு மேல் ஏறும் நிவித முப்புரி நூலுடன் நான்கு கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகளுடன் உள்ளன. இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதப்படுகிறது. இதன் அருகில் பலகை கல்லில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் உள்ளது. நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில் பருத்த வயிற்றுடன் பீடத்தில் அமர்ந்தவாறு இருக்கும் சிலை மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது. பல்லவர் கால பிள்ளையார் சிலையுடன் ஒத்துப் போவதால் இந்த சிலை 7-ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் அல்லது 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிக்கப்பட்ட சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.