tamilnadu

img

ஒரு நூற்றாண்டாக கிடப்பில் போடப்பட்ட திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம்

ஒரு நூற்றாண்டாக கிடப்பில் போடப்பட்ட திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம்

ஒன்றிய அரசு விரைந்து நிறைவேற்ற ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜூலை 14- கடந்த ஒரு நூற்றாண்டாக கிடப்பில் போடப்பட்ட திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டு மென திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலி யுறுத்தியுள்ளார். சர்வே கற்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையாக திண்டுக்கல் - சபரி மலை ரயில்வே திட்டம் உள்ளது. 1910 ஆம் ஆண்டுக்கு முன்பே ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கொடைரோடு முதல் உத்தமபாளை யம் வரை ரயில்வே திட்டத்திற்காக சர்வே செய்யப்பட்ட கற்கள் இன்றளவும் உள்ளன. ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் சர்வே  செய்யப்பட்டதற்கான கற்கள் உள்ளன. இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதை போராட்டக் குழு உருவாக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.  முதற்கட்டமாக திண்டுக்கல்-லோயர்கேம்ப் வரை தரைப்பகுதி யிலும், பின்பு லோயர் கேம்ப்பில்  இருந்து குமுளி மலைப்பாதை வண்டிப்பெரியாறு வழியே அடுத்தகட்டமாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று  அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  செயல்படுத்த முடியாத திட்டப் பட்டியலில் சேர்ப்பு இதற்காக 2012 ஆம் ஆண்டு லோயர்கேம்ப் வரை ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடு ரூ.650 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2016 இல் இத்திட்டம் திண்டுக்கல்-சபரிமலை என்று திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டத்தை செயல்படுத்த முடி யாத நிலை ஏற்பட்டது. காரணம், லோயர்கேம்ப்பில் இருந்து தமிழக எல்லையை கடந்து செல்கையில், முல்லை பெரியாறு அணை, வன விலங்கு சரணாலயம், அடர்ந்த காடுகள் இருப்பதுதான். இதனைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்படுத்த முடியாத திட்டங்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டது திண்டுக்கல் - சபரிமலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல் வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 201 கிலோ மீட்டர் தூரப்பாதை இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு இடுக்கி நாடாளுமன்ற உறுப்பி னர் டீன் குரியகோஸ், நாடாளு மன்றத்தில் சபரிமலை ரயில்வே திட்டம் குறித்து கேள்வி எழுப்பி னார். அதற்கு பதிலளித்த ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திண்டுக்கல் முதல் தேனி வழியாக குமுளி வரை யிலான ரயில்வே திட்ட ஆய்வு பணி 2014ஆம் ஆண்டில் நிறைவடைந்த தாகவும், திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான 201 கிலோமீட்டர் அகல ரயில்வே திட்டத் திற்கான ஆய்வுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். புதிய பகுதிகளுக்கு ரயில்வசதி 2025-26 ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் அறிக்கையில், திண்டுக்கல் முதல் சபரிமலை வரை புதிய ரயில் பாதை சர்வே பணிக் காக ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சபரிமலைக்கு நேரடி ரயில் வசதி கிடைப்பதுடன்,  திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட இதுவரை ரயில் பாதையே இல் லாத பகுதிகளுக்கு புதிய ரயில் வசதி உருவாகும் நிலை உள்ளது. நூற்றாண்டு கோரிக்கை திண்டுக்கல் முதல் சபரி மலை வரையிலான 201 கிலோ மீட்டர் அகல ரயில்வே திட்டத்திற் கான ஆய்வுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரி வித்தார்.  ஒன்றிய அரசு 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான அகல ரயில் பாதை சர்வே பணிக் காக ரூ.46 லட்சம் ஒதுக்கீடுசெய்தது. நூற்றாண்டு காலத்திற்கு முன்பு சர்வே செய்யப்பட்டு இன்று வரை யில் நிறைவேற்றப்படாத நிலையே  உள்ளது. எனவே திண்டுக்கல், தேனி மற்றும்  தென் மாவட்ட மக்களின் நூற்றாண்டு கோரிக்கையான திண்டுக்கல் சபரி மலைக்கு ரயில் திட்டத்தை விரைந்து ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும் என ஆர். சச்சிதானந்தம் கேட்டுக் கொண்டுள்ளார்.