ரூ.40.86 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
நாமக்கல், ஜூலை 10- நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழா வில், ரூ.40.86 கோடியில் நலத்திட்ட உதவி களை பொதுமக்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், ரூ.89.22 கோடி மதிப்பீட்டில் 141 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், ரூ.40.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட கீரம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவ லகக் கட்டடம், ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் மல்லசமுத்திரம் சார்பதிவாளர் அலுவல கக் கட்டடம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தத் தாதிரிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அறிவி யல் ஆய்வகக் கட்டடம், ரூ.6.13 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை பொருட்கள் சேக ரிப்பு மையம் என மொத்தம் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் 39 முடிவுற்ற திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, 2,099 பயனாளிகளுக்கு ரூ.40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, நாடாளு மன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், வி.எஸ்.மாதேஸ்வரன், கே.இ.பிர காஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங் கம், கு.பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சுமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.