மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் அக்.28 அன்று வைப்பீட்டாளர்கள் போராட்டம்
சென்னை, அக்.22 - மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைவு நீதிமன்றத்தின் வாயி லாக நடத்த வேண்டும் என்று பாதிக் கப்பட்ட வைப்பீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 151 ஆண்டுகள் பழமையான மயி லாப்பூர் இந்து பர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் யாதவ் உள்ளார். வின் தொலைக்காட்சி உரிமையாளராகவும் அவர் இருக்கி றார். இவர், 6 ஆயிரம் வைப்பீட்டா ளர்களின் வைப்பீட்டு தொகையிலி ருந்து ரூ.700 கோடி மோசடி செய்துள் ளதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாநில பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவநாதன் உள்ளிட் டோரைக் கைது செய்தது. தற்போது தேவநாதன் யாதவ் பிணையில் வெளியே உள்ளார். இந்நிலையில், மயிலாப்பூர் நிதிநிறு வனத்தால் பாதிக்கப்பட்ட வைப்பீட்டா ளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், செயலாளர் கே.ஞானஸ் கந்தன், ஆலோசகர் எஸ்.குமார் உள்ளி ட்டோர் புதனன்று (அக்.22) செய்தியா ளர்களிடம் கூறியதாவது: 30 ஆயிரத்திற்கும் அதிகமான போலி பரிவர்த்தனைகள் மூலம் தேவநா தன் யாதவ் உள்ளிட்டோர் இந்த மோச டியைச் செய்துள்ளனர். நிதி நிறுவனத் தின் பணத்தைத் தனியார் நிறுவனங் களுக்கு மாற்றியுள்ளனர். குறிப்பாக, 22 முன்பணியில்லா நிறுவனங்களை (ஷெல் கம்பெனி) உருவாக்கி, அங்கு பணத்தை மாற்றி மோசடி செய்துள் ்ளனர். தன் குடும்பத்தினரின் பெயரில் 72க்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இத்தகைய பணமோசடி தடத்தைக் கண்டறிய பரிசோதனைக் கணக்காய்வு நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் செலவுகளால் நிறுவனத்தின் நிதி வீழ்ச்சி அடைந்த தாகக் கூறினார். இந்த மோசடி கார ணமாக 10க்கும் மேற்பட்ட வைப்பீட்டா ளர்கள் அதிர்ச்சி, மன அழுத்தத்தால் உயிரிழந்துள்ளனர். தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தாலும், விசா ரணை மற்றும் சொத்து மீட்பு நடவடிக் கைகள் மந்தமாக நடக்கின்றன. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் வழியாக நடத்த முதல மைச்சர் உத்தரவிட வேண்டும். மோசடியாகப் பெற்ற பணத்தைப் பின்தொடரும் பரிசோதனைக் கணக் காய்வு மேற்கொள்ள வேண்டும். வைப்பீட்டாளர்களின் பணத்தில் வாங்கப்பட்ட உடமைகள் மற்றும் சொத்துக்களை மீட்க வேண்டும். வைப் பீட்டாளர்களுக்கு மூலதனத்துடன் வட்டியையும் சேர்த்து முழுமையாகத் திருப்பித் தர வேண்டும்.அரசு, சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவை வெளிப்படை யான, விரைவான நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 28ஆம் தேதி நிதி நிறுவ னம் அருகே போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
