tamilnadu

104 இந்தியர்களை நாடு கடத்தியது சட்ட விரோதமானது

அமெரிக்க ஜனாதிபதியாக பத வியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோத மாக குடியேறியவர்களை நாடு கடத்து வதற்கான நடைமுறைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோத மாக குடியேறியதாக கூறி 104 இந்தியர்க ளை சில தினங்களுக்கு முன் அமெரிக்க  ராணுவ விமானம் இந்தியாவிற்கு அழை த்து வந்தது. ஹரியானா, குஜராத்,  பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதே சம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 104 பேரும் கைவிலங்கிட்டும், சங்கிலியால் கால்கள் கட்டப்பட்டும் அமிர்தசரஸ் (பஞ்சாப்) விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், 104 இந்தியர்களை நாடு கடத்தியது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வீரேந்திர வசிஷ்டா தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடி தத்தில்,”அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்திய புலம்பெயர்ந் தோரும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அமெ ரிக்க இராணுவ விமானத்தில் கைவிலங்கு கள் மற்றும் சங்கிலிகளில் அழைத்து வரப்பட்டனர். இதுபோன்ற செயல்முறை களானது கடுங்குற்றவாளிகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் புலம்பெயர்ந்தோரை இவ்வாறு நடத்தியது அடிப்படை மனித உரிமை மீறலாகும். அவர்களை நாடு கடத்துவது என்பது சட்டவிரோத இடம்பெயர்வு மட்டுமே. ஆனால் அவர்களை நடத்திய விதமானது உடல் ரீதியாகவும், மன ரீதி யாகவும் துன்புறுத்தலாகும். 

ஐ.நா மனித உரிமைகள் விதிகளின் படி, அமைதியாக இருப்பவர்களுக்கு எதி ராக வலுக்கட்டாயமாக சக்தியைப் பயன் படுத்துவது சட்டவிரோதமானது; மிக  மோசமானது. நாடு கடத்தப்பட்டவர்க ளை கைவிலங்குகள் மற்றும் சங்கிலி களில் வைத்திருந்தது அவமானகரமான  செயலாகும். மேலும் மனிதாபிமானமற் றது. எனவே இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழுமையான விசாரணையை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை ஆவணப்படுத்த வேண்டும். 

அதே போல இந்த விவகாரத்தில் பாதி க்கப்பட்டவர்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்தியா திரும்பியவர்களுக்கு முறை யான மருத்துவ மற்றும் உளவியல் உதவி களை வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.