டென்மார்க் வீரர் ரூனே அவுட்
மகளிர் பிரிவைப் போல ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் அதிர்ச்சி தோல்வி கள் அரங்கேறி வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ரூனே, தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் ஸ்ட்ரப்பை எதிர்கொண்டார். இரு வீரர்களும் வெற்றிக் காக கடுமையாக போராடிய நிலையில், ஸ்ட்ரப் 7-6 (7-5), 2-6, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 16ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் மென்சிக், தரவரிசையில் இல்லாத பிரான்சின் பிளான்செட்டிடம் தோல்வி அடைந்தார்.