மாநில அரசின் உரிமையை பறிக்கும் யுஜிசி அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில், திங்களன்று திருச்சி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மத்திய குழு உறுப்பினர் மிருதுளா தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி, மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகா, மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா, புறநகர் மாவட்டத் தலைவர் வைரவலைவன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.