tamilnadu

பெண்கள் குறித்து கவலைப்படாத மோடி அரசின் பட்ஜெட்

துதில்லி, பிப்.2- பெண்களின் நிலை குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத மோடி அரசின் பட்ஜெட் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இடித்துரைத்துள்ளது.மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அனைத்துக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா,  பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மோடியின் அரசாங்கம் மிகவும் முக்கியமான பட்ஜெட் தயாரிப்பில் மிகவும் அடாவடித்தன மாக நடந்துகொண்டிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார ஆய்வறிக்கைபோலவே பட்ஜெட்டும் மக்களின் உண்மையான பிரச்சனைகளை உதாசீனம் செய்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மிஷன் சக்தி, சமர்த்யா மற்றும் வாத்சால்யா முதலிய திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் அதி கரிக்கப்பட வேண்டும் என்று மாதர் அமைப்புகள் கோரின. ஆனால், இந்த பட்ஜெட்டில் அவற்றி ற்கு மொத்த செலவினத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயனாளி களாக உள்ள மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், தலித், பழங்குடி யினர், சிறுபான்மையினர் மற்றும் வடுப்படத் தக்க பிரிவினர் நலத் திட்டங்களுக்கும் சென்ற  ஆண்டில் மொத்த ஒதுக்கீட்டில் 3.2 சதவீதமாக  இருந்த ஒதுக்கீடு இந்த ஆண்டு 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

பெண்களின் சமூகப் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு இல்லை

வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்த்திட  உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய  கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு சென்ற திருத்தப்பட்ட  மதிப்பீட்டி லேயே 14 சதவீதம்  குறைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 40  சதவீதம்  குறைக்கப் பட்டிருக்கிறது.  நகர்ப்புறவேலைவாய்ப்புத் திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. பெண் களுக்கான சமூகப் பாதுகாப்பிற்கு எவ்விதமான ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. உழைக்கும் பெண்களுக்கு வரிச் சலுகைகள் எதுவும் அளிக்கப்படவில்லை. உலக பசி-பட்டினி அட்டவணையில் இந்தியாவின் நிலை மேலும் கணிசமான அள விற்கு மோசமாகியிருக்கிறது. எனினும் உணவு மானியங்கள் 16 சதவீதம் குறைக்கப்பட்டிருக் கிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும்  ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் பெண்  குழந்தைகளின் கல்வி கடும் பாதிப்புக்கு உள்ளா னது. இணைய வழிக் கல்வி என்பது கிராமப் புறங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காக, அதிக ஒதுக்கீடு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. மாறாக இந்த அரசாங்கம் பெண் குழந்தை களுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை யைக் கொண்டுவரவும், இணைய வழிக் கல்வியைக் கொண்டுவரவுமே வெட்கம் ஏது மின்றி விரும்புகிறது.

இவ்வாறு இந்த பட்ஜெட் பெண்கள்,  விவசாயிகள், உழைக்கும் மக்களின் பிரச்ச னைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளுக்கு விதித்து வந்த அனைத்துவிதமான வரிகளிலும் 3 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. இவ்வாறு மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசாங்கமே என்பதை மெய்ப்பித்திருக்கிறது. இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சனைகள் எதைப்பற்றியும் கவலைப்பட மறுத்திருக்கிறது. எனவே இத்தகைய மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்துக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  (ந.நி.)