நான்கு தலைமுறைகளுக்கும் மேல் உழவடை செய்பவர்களுக்கே நிலத்தை வழங்க கோரிக்கை
பொன்னமராவதி, செப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி ஒன்றியம் தேவன்பட்டி அருகே உள்ள பொழிஞ்சிவயலில் தேவன்பட்டி, பொய்யாமணிப்பட்டி, வேலம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த நான்கு தலை முறைகளுக்கு மேலாக உழவடை செய்து வரும் 60-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி, பட்டா வழங்க வேண்டும் என கோரி சிங்கம்புணரி வட்டாட்சியர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோ ரிக்கை மனு அளித்து காத்திருக்கின்ற னர். இந்நிலையில், செவ்வாயன்று சிங்கம்புணரி தாலுகா நிலஅளவை துறையைச் சேர்ந்த வட்டத்துணை ஆய்வாளர் தலைமையிலான வரு வாய்த் துறை அலுவலர்கள், நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி நில அளவை யில் ஈடுபட வந்தனர். அப்போது அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் இராமசாமி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டி யன் தலைமையில் செங்கொடியுடன் திரண்ட உழவடை விவசாய குடும்பத்தி னர், நிலத்தை அளப்பதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து, போராட்டம் நடத்த பொழிஞ்சிவயல் அடைக்கலம் காத்தார்கோவில் அருகில் திரண்டனர். இதனால் வருவாய்த் துறை அதி காரிகள், “ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத் தில் உங்கள் கோரிக்கையை தெரி வியுங்கள்” என்று கூறி அளக்காமல் திரும்பிச் சென்றனர்.