tamilnadu

img

வந்தவாசி கோரை பாய் நெசவு தொழிலை பாதுகாக்க கோரிக்கை

வந்தவாசி கோரை பாய் நெசவு  தொழிலை பாதுகாக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூலை 23 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் தயாரிக்கப்படும்  கோரைப்பாய்க்கு உரிய விலை கிடைக்கவும் இந்த தொழிலை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு முன்வரவேண்டும் என்று மக்களவை யில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வலியுறுத்தினார்.  அப்போது,“தமிழகத்தில் வந்தவாசி கோரைப் பாய் நெசவுத் தொழில் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் பாய்கள் மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குடிசைத் தொழிலாக இருந்த கோரைப்பாய் தற்பொழுது இயந்திரத்தின் மூலம் குடும்பத் தொழிலாக செய்து வருகின்றனர்.  டிரேட் இந்தியா பட்டி யல்களின் படி இந்த நகரம் பல சிறிய அளவிலான கைவினைஞர்கள் மற்றும் குடும்பத் தால் நடத்தப்படும் பட்டறைகளைக் கொண்டு நெசவு செய்யப்படுகிறது. சுற்றுச் சூழலுக்கு உகந்த கோரை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வந்தவாசியில் உள்ளனர். இந்த சிறப்புகள் காரணமாக ஆரணி தொகுதியில் உள்ள வந்தவாசி பகுதியில் கோரை பாய்க்கு என பூங்கா அமைக்க வேண்டும்”என கேட்டுக்கொண்டார்.