tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தில்லி ரயில் நிலைய  கூட்ட நெரிசலில்  பலி எண்ணிக்கை  18 ஆக உயர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத்தின் (பிரயாக்ராஜ்) திரி வேணி சங்கமத்தில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்ப மேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28 அன்று மவுனி அமா வாசை நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  31 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை உறுதியாக தெரிவிக் கப்பட்டதால் பலர் காணாமல் போயுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தில்லி ரயில் நிலையத்தில் விபத்து

கும்பமேளா நிகழ்வால் தில்லி ரயில்  நிலையத்தில் கூட்ட நெரிசலில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்  ளது. சனிக்கிழமை அன்று இரவு கும்ப மேளா நிகழ்விற்கு பங்கேற்க புதுதில்லி ரயில் நிலைய நடைமேடை 14இல் ஆயி ரக்கணக்கானர் காத்திருந்தனர். ஆனால் ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவ னேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள்  செல்வதற்காக காத்திருந்த பயணிகளும்  நடைமேடை 12, 13, 14இல் திரண்டனர். ஆனால் ரயில்கள் தாமதமானதால் மற்ற  ரயில்களில் ஏறி அலகாபாத் செல்ல 14  மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகள் மற்றும்  15ஆவது நடைமேடையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி  சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரி ழந்தனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் தில்லி லோக் நாயக் ஜெய்  பிரகாஷ் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தில்லி ரயில் கூட்ட நெரிசலில் பலியா னோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 14  பெண்கள். மொத்தமாக உயிரிழந்த வர்களில் 5 பேர் சிறார்கள் ஆவார்.  அவர்  களில் 2 பேர் 10 வயதுக்குட்பட்டவர்கள்  என செய்திகள் வெளியாகியுள்ளன.

கும்பமேளாவே அர்த்தமற்றது 

லாலு பிரசாத் கண்டனம்

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிச லில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்ப வத்திற்கு முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான லாலு பிரசாத் கணட னம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”கும்பமேளாவே அர்த்தமற்ற தாக உள்ளது. தில்லி ரயில் கூட்ட நெரிசல்  சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது. ஒன்றிய அரசு போதிய ஏற்பாடு களைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே  அமைச்சர் பதவி விலக வேண்டும். இது  ரயில்வே துறையின் முழு தோல்வி யாகும்” என குற்றம்சாட்டியுள்ளார்.  பமாக்கோ