tamilnadu

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடிவு? அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடிபணியும் பாஜக அரசு!

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடிவு? அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடிபணியும் பாஜக அரசு!

புதுதில்லி, செப். 26 - அமெரிக்காவின் அழுத்தம் மற்றும்  மாறும் சந்தை நிலவரங்கள் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கு வதை படிப்படியாகக் குறைக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டு யுத்தத்தில் ஈடுபட வைத்த அமெரிக்கா, அதன்மூலம் உக்ரைனைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், உக்ரைன் உடனான போரையே காரண மாகக் காட்டி, ரஷ்யாவுடன் உலக நாடுகள் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என மிரட்டி வருகிறது.  குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, ரஷ்யா வுடனான இந்தியாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரை கூடுதல் வரி விதித்தார். கடந்த செப்ட ம்பர் 24 அன்று ஐ.நா. பொதுச் சபையில் பேசிய டிரம்ப், ‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதி ரான போருக்கு இந்தியாவும், சீனாவும் தான் முக்கிய நிதியளிப்பாளர்களாக உள்ளனர்’ என்று கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தான், அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் மாறும் சந்தை நில வரங்கள் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.  ரஷ்யா வழங்கும் தள்ளுபடிகள் கணி சமாகக் குறைந்துள்ளதாலும், இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா, பிரேசில் போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதியை அதி கரித்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குறைப்பு நடவடிக்கை படிப்படி யாக மேற்கொள்ளப்படும் என்றும், நவம்பர் மாதத்திற்கான எண்ணெய் கொள்முதல் ஆர்டர்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.