tamilnadu

ரசாயனப் பொருள் கலந்த இருமல் மருந்து ம.பி.,யில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

ரசாயனப் பொருள் கலந்த இருமல் மருந்து ம.பி.,யில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

போபால் பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மற்றும் பந்தூர்னா மாவட்டங்களில் மருத் துவர்களின் பரிந்துரையால் “கோல்ட்ரிப்” எனும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.  மத்தியப் பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரா மாநி லத்தின் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 ம.பி., குழந்தைகள் புதன் கிழமை அன்று இறந்தன. இதன்மூலம் அம் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து உயிரி ழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 19 குழந்தை கள் சிந்த்வாரா மாவட்டத்தையும், 2 குழந்தை கள் பெதுல் மாவட்டத்தையும், ஒரு குழந்தை பந்தூர்னா மாவட்டத்தையும் சேர்ந்தது ஆகும். இதுதவிர ராஜஸ்தானில் 2 குழந்தைகள் இறந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான் மாநிலங்களில் இருமல் மருந்துக்கு உயி ரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை உயரும் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா, பெதுல் மாவட்டங்களில் இருமல் மருந்தை குடித்து சிகிச்சை பெற்று வரும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. “கோல்ட்ரிப்” நிறுவனம் மூடல் பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் “டை எத்திலீன்  கிளைகோல்” எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிக மாக (48.6%) கலக்கப்பட்டுள்ளதும், அது  குழந்தைகளிடையே சிறுநீரகச் செயலி ழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தமிழ்நாடு, மத்தியப் பிரதே சம் உள்ளிட்ட மாநிலங்களில் “கோல்ட்ரிஃப்” இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. “கோல்ட்ரிஃப்” மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அருகேயுள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும்ஸ்ரீசென் பார்மா நிறுவனம் மூடப்பட்டுள்ளதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினரால் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் என்ற வார்த்தையை “கோடி மீடியா” ஊடகங்கள் பயன்படுத்த மாட்டார்களா? 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு “கோல்ட்ரிப்” மருந்து காரணம் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. “கோல்ட்ரிப்” நிறுவனம் தமிழ்நாட்டில் இருப்ப தால், தமிழ்நாட்டின் மருந்தால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகளின் உயிரிழப்பு என அம்மாநில அரசு மற்றும் பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் ஒரு மாநிலத்திற்கு எதிராக அவதூறுச் செய்தியை வெளியிட்டு வருகின்றன. “கோல்ட்ரிப்” இருமல் மருந்தில் இருப்பதை போன்று “ரீ லைப் (ReLife)” மற்றும் “ரெஸ்பிபிரெஷ் (Respifresh)” ஆகிய இரு மருந்துகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட “டைஎத்திலீன் கிளைகோல்” இருப்பது தரப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த இரு மருந்துகளுக்கும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தடைவிதிக்கப்படுவதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ரெஸ்பிபிரெஷ் பாஜக ஆளும் மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்ததாகும். அதே போல “ரீ லைப்” திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தது ஆகும். இதில் “கோல்ட்ரிப்” தமிழ்நாடு, “ரீ லைப்” மேற்கு வங்கத்தின் தயாரிப்பு என கூறும் “கோடி மீடியா” ஊடகங்கள் “ரெஸ்பிபிரெஷ்” மருந்து குஜராத் மாநிலத்தில் தயாராகி வருவதை குறிப்பிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.