tamilnadu

img

தொடர் மழையால் அணைகள் நிரம்புகிறது

தொடர் மழையால் அணைகள் நிரம்புகிறது

ஈரோடு, ஜூலை 26- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக ளில் பெய்து வரும் தொடர் கனமழை  காரணமாக, பவானி சாகர், பில்லூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இத னால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வா கங்கள் சார்பாக பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலமாக வெள்ள எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி செய்திக்குறிப்பு ஒன்று வெளி யிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட் டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  சனியன்று காலை 11.00 மணியளவில்  99.00 கனஅடியை எட்டியுள்ளது. அணை யின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ள தால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 100 கன அடியை எட்டும். இதனால், அணையில்  இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் 3000  கனஅடி முதல் 10000 கனஅடி வரை எந் நேரத்திலும் பவானி ஆற்றில் திறந்து  விடப்படும். எனவே மாவட்ட நிர்வாகம்  சார்பில் ஆற்றங்கரையோரம் தாழ்வான  பகுதிகளில் வசிக்கும் பொதுமக்க ளுக்கு ஒலி பெருக்கி மூலமாக வெள்ள  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழியார் அணையின் நீர்மட்டம் 118,85 அடியை எட்டியது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக ளில் பெய்து வரும் கனமழை காரண மாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத னால், வெள்ளியன்று மூன்று மதகுகள்  வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், சனியன்று நிலவரப்படி 120  அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு  அணை நீர்மட்டம் 118,85 அடியை எட்டி யுள்ளது. மேலும் அணைக்கு தற் பொழுது வினாடிக்கு 1763 கனஅடி நீர்வ ரத்து வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 11 மதகுகள் வழியாக வினா டிக்கு 1763 கனஅடி உபரி நீர் ஆற்றில்  வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற் றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்க ளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பில்லூர் அணை பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதி களான நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி, அவிலாஞ்சி உள்ளிட்ட பகுதி களில் தொடர்ந்து மழை பெய்து வந்த தால், பில்லூர் அணை அதன் முழு  கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண் ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த  ஆண்டு மட்டும் இதுவரை மூன்று முறை  அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் பட்ட வந்த நிலையில், மீண்டும் நான்கா வது முறையாக அணை முழு கொள்ள ளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு  கருதி அணையில் இருந்து மேல் மதகு திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டுப்பாளை யம் பவானி ஆற்றில் கரையோர பகுதி யில் இருக்கக்கூடிய பொதுமக்கள் எச் சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  வருவாய்த் துறையினர் கேட்டுக் கொண் டுள்ளனர்.