tamilnadu

img

வங்கக்கடலில் மோந்தா புயல்

வங்கக்கடலில் மோந்தா புயல்

சென்னை, அக். 24 - வங்கக் கடலில் உருவாகி யிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 27 அன்று புய லாக வலுப்பெறும் என இந்திய வானி லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில், இந்த வாரத் துவக்கத்தில் நிலவி வந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறாமல், தடம் தெரியாமல் மறைந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை,  வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அக்டோபர் 26 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27 அன்று புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலாதாக உருவாகும் புயலின் பெயர் ‘மோந்தா’  இந்த புயலுக்கு ‘மோந்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதுது. இது ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் தமிழ கத்தின் வட மாவட்டங்களுக்கு மழைப்பொழி வைக் கொடுக்கும். தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு அல்லா மல் கனமழையைத் தருவதாக இந்த புயல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, வட மாவட்டங் களான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  6 மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக அக்டோபர் 26 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்டோபர் 27 அன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமழை பெய்யும் என்றும்,  அக்டோபர் 28 அன்று திருவள்ளூர்,  ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 28 வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி: முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனொரு பகுதியாக, சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக். 24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன், தெற்கு வட்டாரத் துணை ஆணையாளர் அதாப் ரசூல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி மற்றும் அரசு அலுவலர்கள், ஆய்வின்போது உடனிருந்தனர்.