tamilnadu

img

பிபர்ஜாய் புயல்: இராஜஸ்தானில் கடும் மழை

நான்கு சிறிய அணைகள் சேதம்;  ரயில் தண்டவாளங்கள் சேதம்

ஜெய்ப்பூர், ஜூன் 18- பிபர்ஜாய் புயலால் இராஜஸ்தான் மாநிலத்தில் கடும் மழை பெய்துள்ளது. ஐந்து இடங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.  பிபர்ஜாய் புயல் மற்றும் கன மழையால் இராஜஸ்தான் மாநிலத்தில்  மூன்று மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தா னில் பல பகுதிகளில் கனமழை பதிவாகி யுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அஜ்மீரில் பிபர்ஜாய் சூறாவளியின் கார ணமாக மாநிலத்தின் மீது கருமேகங் கள் சூழ்ந்திருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்  நிலைமையைச் சமாளிக்க தேசிய பேரி டர் மீட்புப் படையினரை தயார் நிலை யில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்  பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர். ஞாயிறன்று ஜலோர் மாவட்டத்தில் புயலால் பெய்த மழையைத் தொடர்ந்து  பின்மால் கிராமத்தின் தாழ்வான பகுதி களில் வசிக்கும் மக்களையும்  பாலி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில்  தண்ணீரில் தத்தளித்த ஆறு பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர்  மீட்ட னர். பாலியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி வரை 240 மி.மீ பதி வாகியுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர், சிரோஹி மற்றும் பார்மர்  மாவட்டங்களில் பிபர்ஜாய் புயலால் ஏற்பட்ட கனமழையால் வெள்ளம் சூழ்ந்  துள்ளது. மனித உயிர் மற்றும் கால்நடை கள் சேதம் எதுவும் இல்லை என்றார்  மாநில பேரிடர் மற்றும் நிவாரணத் துறை செயலாளர் பி.சி.கிஷன். மேலும் அவர் கூறுகையில், “அதிக தண்ணீர் வரத்து காரணமாக பார்மரில் நான்கு-ஐந்து சிறிய அணைக்கட்டுகள் சேதமடைந்துள்ளன.

பிண்ட்வாரா, அபு சாலை, ரியோடார் ஆகிய இடங்க ளில் உள்ள பல பெரிய அணைகள்  நிரம்பி வழிகின்றன. சிரோஹியில் உள்ள பாடிசா அணையின் நீர்மட்டம் 315 மீட்டராக உயர்ந்துள்ளது” என் றார். கடந்த 24 மணி நேரத்தில் (ஞாயிறு  காலை எட்டு மணி வரை) மாநிலத்தில்  பல பகுதிகளில் கனமழை பதிவாகி யுள்ளது. ஜலோரில் அஹூரில் 471 மி.மீ. மழையும், அதைத் தொடர்ந்து ஜலோ ரில் 456 மிமீ, மவுண்ட் அபுவில் 360  மிமீ, சித்தல்வானாவில் 338 மி.மீ,  ஜஸ்வந்த்புராவில் 332 மி.மீ, ராணி வாடாவில் 322 மிமீ, ஷியோகஞ்சில் 315 மி.மீ, சுமர்பூரில் 270 மி.மீ, ராணி 249  மிமீ மழை பதிவாகியுள்ளது.  ரயில் தண்டவாளங்கள் சேதம் பிபர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் ஐந்து இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமான தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடை பெறுகிறது. சேதமான வழிதடத்தில் செல்லவிருந்த ரயில்கள் உடனடியாக வேறு பாதைக்கு மாற்றப்பட்டன  குஜராத் பிபர்ஜாய் புயலால் குஜராத் மாநிலத்தில் எட்டு கடலோர மாவட் டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஒரு லட்சத்திற்  கும் அதிகமான மக்களை பாது காப்பான இடங்களுக்கு மாற்றியுள்ள னர். உயிர் சேதம் எதுவும் இல்லை என்று  மாநில அரசு தெரிவிக்கிறது.