வில்லிவாக்கத்தில் கியூபா நிதி வசூல்
கியூபா நட்புறவு நிதி வசூல் இயக்கம் சனிக்கிழமையன்று (ஆக.9) நாதமுனி பகுதியில் சிபிஎம் வில்லிவாக்கம் பகுதிக் குழு உறுப்பினர் ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த வசூலை, மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தொடங்கி வைத்தார். பகுதிக்குழு உறுப்பினர்கள் முரளி, யூஜின் பார்க், 95வது வட்ட கிளைச் செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.