கியூபா நிதி வழங்கல்
கரூர், ஜூலை 25- கரூர் மாவட்டத்தில், கியூபா ஒருமைப்பாடு நிதியாக சேகரிக்கப்பட்ட ரூ.15 ஆயிரத்து 700 ஐ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.தண்டபாணி, எஸ்.பி.ஜீவானந்தம், கே.வி.கணேசன், எம்.ராஜேந்திரன், கெ.சக்திவேல் ஆகியோர் வழங்கினர்.