tamilnadu

img

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

வாய்ப்பு வாசல்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 881 காலிப் பணியிடங்கள்  

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் தற்காலிக விரிவுரையாளர் பணிக்கு 881  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியல் துறையில் ஏதாவது ஒரு பாடப்பிரி வில் குறைந்தபட்சம் 55 விழுக்காடு (எஸ்.சி, எஸ்.டி. 50%) மதிப்பெண் களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் (Ph.D) பட்டம் பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு  : ஜூலை 1, 2025 தேதியின்படி அதிகபட்சமாக 57க்குள்  இருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: இதர பிரிவினர்களுக்கு ரூ.200 மற்றும் எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம் மற்றும் விரிவான பாடத் திட்டம் மதிப்பெண் விவரம் மற்றும் கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கை யைப் பெற www.tngasa.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி  அக்டோபர் 8, 2025 ஆகும்.

கனரா வங்கியில் அப்ரண்டீஸ் பயிற்சி பொதுத்துறை வங்கி

களில் ஒன்றான கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு ஒரு வருட காலத்திற்கான தொழில் பழகுநர் (Apprentice) பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.  மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள்  நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்படுவர்.கல்வித்தகுதி பற்றி முழு விபரங்களை அறிய www.nats.education.gov.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடவும். www.canarabank.bank.in என்ற இணையதளம் வாயி லாகவும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 12, 2025 கடைசித் தேதி ஆகும்.

சிஎஸ்ஐஆர்,  யுஜிசி நெட் தேர்வு   (CSIR-NET)

சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுப் பாடங்களுக்கான நெட் தேர்வு நடத்துகின்றன.  கல்வித் தகுதி: வேதியியல், புவிசார்ந்த அறிவியல், உயி ரியல், கணித அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் இளநிலை ஆய்வுப்படிப்பு மற்றும் உத விப் பேராசிரியர் நியமனம் மற்றும் முனைவர் பட்டத்திற்  கான ஆய்வுப் படிப்பு ஆகிய வற்றிற்கு தகுதி பெற இந்த நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசிய மாகும். தேர்வு முறை : கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வு 180 நிமிடங் களுக்கு இருக்கும். இரண்டு ஷிப்ட்  களாக நடத்தப்படும். கொள்குறிவகை வினாக்கள் இடம் பெறும். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழி களிலும் வினாத்தாள் இருக்கும்.  தேர்விற்கான விரிவான பாடத் திட்டம் மதிப்பெண் விவரம் மற்றும்  கூடுதல் விபரங்கள் அறிவிக்கை யில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://csirnet.nta.ac.inஎன்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். தேர்வுத் தேதி – டிசம்பர் 18,2025. விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1150. இதர பிரிவின ருக்கு ரூ.600 மற்றும் எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ/பிடபிள்யுடி பிரிவினருக்கு  ரூ.325 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான இணைப்பைப் பெறவும், கூடுதல் விபரங்களுக்கும் https://csirnet.nta.ac.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பம் நிரப்புவதற்கான கடைசித் தேதி - அக்டோபர் 24, 2025 ஆகும்.