பட்டியலினத்தவர்களுக்கு தனி பட்டா சிபிஎம்-ததீஓமு ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக.13- பட்டியலினத்தவர்க்கு தனி பட்டா கேட்டு பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் மற்றும் ததீஒமு சார் பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் பணிக்கம் பாளையம் உள்ளது. இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கு தோராயப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை தனிப்பட்டா வாக வழங்க வேண்டும் எனக் கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். அரசியல் தலையீட்டால் தனிப் பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தனி பட்டா கேட்டு செவ்வாயன்று பெருந்துறை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் என்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, மாவட்டப் பொருளா ளர் மா.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் சி.பழனி சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ச்சுனன், ஈரோடு தாலுகா செயலா ளர் என்.பாலசுப்பிரமணி ஆகியோர் பேசினர். பாதிக்கப் பட்ட மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத் தின் நிறைவாக ததீஒமு செயலாளர் ஞாம.ராஜசேகரன் நன்றி கூறினார்.