எம்.ஆர்.எப் டயர் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
மாவட்டச் செயலாளர் அறிக்கை பெரம்பலூர், அக்.15 - பெரம்பலூர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றி யம் நாரணமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 22 மாதமாக ஊதிய உயர்வை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன் உற்பத்தியை மட்டும் கூடுதலாக்க வேண்டும் என்று நிர்வாகம் கட்டா யப்படுத்தி வருகிறது. திருச்சியில் தொழிலாளர் துறை முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, எம்ஆர்எப் நிர்வாகத்தின் பதில் அடாவடித்தன மாகவே இருந்தது. இதனால் தொழிலாளர் களுக்கு 22 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வரு கிறது. இதைக் கண்டித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அக்.11 அன்று நடைபெற இருந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு பாடாலூர் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து தொழிலா ளர்களை அழைத்துப் பேசி, தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நிர்வாகத்திற்கு ஆதர வாக செயல்படுகிறது. சட்டம் வழங்கியுள்ள ஜன நாயக ரீதியாக போராடும் உரிமையை காவல் துறை பறிக்கும் வகையில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்ட பெரம்பலூர் மாவட்ட காவல் துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக் கிறது. இதையொட்டி, அக்.14 முதல் நடைபெறும் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலை யிட்டு, தொழிலாளர்களை அழைத்துப் பேசி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.