tamilnadu

img

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தோழர்களிடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் நலம் விசாரிப்பு

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தோழர்களிடம்  சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் நலம் விசாரிப்பு

திருவாரூர், ஆக. 21-  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வியாழக்கிழமை வருகை தந்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், திருவாரூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கட்சி தோழர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17 ஆவது திருவாரூர் மாவட்ட மாநாடு திருவாரூர் அருகே உள்ள கூடுரில் நடைபெற்றது.  மாநாட்டுக்கு, மாநாட்டுக்குச் சென்றுவிட்டு கொரடாச்சேரி செல்லும்போது,  மஞ்சைக்கொல்லை என்ற இடத்தில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே. சீனிவாசன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.   இதில் கே.சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து உடனடியாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.  அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தோழர் சீனிவாசனுக்கு கால் எலும்பு சேதமடைந்து இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தொடர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் திருத்துறைப்பூண்டி தெற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமாரசாமி நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில், திருவாரூர் வருகை தந்த சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இச் செய்தி அறிந்து, தோழர்கள் சீனிவாசன் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி மற்றும் கே. சீனிவாசனின் மகனும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளருமான கே.எஸ். செந்தில், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே. கோபிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.