tamilnadu

img

இராஜபாளையத்தில் சிபிஎம் மாநிலக் குழு கூட்டம்

இராஜபாளையத்தில் சிபிஎம் மாநிலக் குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் இரண்டு நாள் கூட்டம், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதன்கிழமை அன்று துவங்கியது. மத்தியக்குழு உறுப்பினர்  கே. பாலபாரதி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என். குணசேகரன் மற்றும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

‘பிளஸ் 2’ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் நடைபெற்ற 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந் தது. இந்நிலையில், ஒரு நாள் முன்னதாக மே 8 அன்றே (வியாழன்) தேர்வு முடிவு கள் வெளியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவு களை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார். அதைத்தொ டர்ந்து மாணவர்கள் https://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in  ஆகிய இணையதள முகவரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.