சென்னை, ஜன. 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா மரு த்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, நலமுடன் உள்ளார். இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ள விபரங்கள் வருமாறு: தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சனிக்கிழமையன்று மதியம் அவருக்கு அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. அவரை உடனடியாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் மருத் துவர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்து வர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அவரை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். என்.சங்கரய்யா உடல் நலம் குறித்தும் கேட்டு அறிந்தார்.
இந்நிலையில் ஞாயிறன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்.சங்கரய்யாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு நலம்விசாரித்தார். அப்போது, மருத்துவர்கள் தமக்கு சிறப்பான சிகிக்சை அளித்துவருவதாகவும், நலமுடன் உள்ளதாகவும் சங்கரய்யா தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடி யாக சென்று என்.சங்கரய்யாவை சந்தித்து நலம் விசாரித்தார். கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து கவனித்து வருகின்றனர். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள் ளார்.