சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு
அமெரிக்காவின் வரிவிதிப்புகள் இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான நட்பை விட, இந்தியர்களின் நலனே முக்கியம். அதனால் நாட்டு மக்களின் நலனில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்
ராஜஸ்தானில் இருமல் மருந்துக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. ஆனால் எச்சரிக்கை இல்லாமல் செயலாற்றியதால் மீண்டும் குழந்தைகள் உயிர் பறிபோயுள்ளது.
ஜேஎம்எம் மூத்த தலைவர் மனோஜ் பாண்டே
பீகார் சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தீவிரமாக பணியாற்றும். ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள 12 தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் கூட்டணி அறிவிப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுவோம்.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா
தேர்தல் ஆணையம் செப்டம்பர் 30 அன்று வெளியிட்ட பட்டியலின்படி பீகாரில் 23 லட்சம் பெண்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. எதன் அடிப்படையில் இந்த வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்பதுக்கான விளக்கத்தை நாங்கள் கோருகிறோம். இதுவரை பதில் இல்லை. ஆனால்வாக்குகள் நீக்கத்தில் முறைகேடு உள்ளது.
 
                                    