இந்துத்துவா குண்டர்களின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட தீபக் குமாருக்கு சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் நேரில் ஆதரவு
டேராடூன் பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரைச் சேர்ந்தவர் தீபக் குமார் (42). சொந்தமாக உடற் பயிற்சிக் கூடம் (ஜிம்) நடத்தி வருகிறார். குடியரசுத் தினத்தன்று (ஜன., 26) தனது நண்பரின் கடைக்குச் சென்றிருந்தார் தீபக். அப்போது அருகில் உள்ள “பாபா ஸ்கூல் டிரஸ்” என்ற துணிக்கடையின் உரிமையாளர் வாக்கில் அகமதுவை (68) தீவிர இந்துத்துவா கும்பலான பஜ்ரங் தளம் குண்டர்கள் மிரட்டு வதைக் கண்டார். 30 ஆண்டுகளாக இருக்கும் அந்தக்கடையின் பெயரில் உள்ள “பாபா” என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்துத்துவா குண்டர்கள் மிரட்டியுள்ளனர். “இது ஏன்? எதற்காக அவரை மிரட்டுகிறீர்கள்?” என தீபக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இந்துத்துவா குண்டர்கள்,”பாபா என்பது இந்தியாவில் முதியவர்களையும், துறவி களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் பொது வான சொல். இந்து தெய்வமான அனுமனையும் குறிக்கிறது. ஒரு முஸ்லிம் அந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது” என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட தீபக்,”முஸ்லிம்கள் இந்தி யர்கள் இல்லையா?” என்று ஆவேசமாகக் கேட்டார். முகமது தீபக் இதனால் ஆத்திரமடைந்த இந்துத்துவா கும்பல் அவரது பெயரைக் கேட்டது. அதற்கு அவர் அதிரடியாக “முகமது தீபக்” என்று பதில ளித்தார். மேலும்,”நான் ஒரு இந்து. நான் ஒரு இந்தியன் என்பதை உங்களுக்கு உணர்த்தவே அப்படிச் சொன்னேன். மதம் எதுவாக இருந்தா லும் இங்கு வாழ அனைவருக்கும் உரிமை உண்டு” என்று கூறி, இந்துத்துவா குண்டர்க ளுக்கு வாய்ப்பூட்டு போட்டார். உடனே பஜ்ரங் தளம் குண்டர்கள் தீபக் மீது தாக்குதல் நடத்தினர். உடற்பயிற்சி உரிமையா ளரான தீபக், பஜ்ரங் தளம் குண்டர்களுக்கு பதிலடி கொடுத்தார். தீபக்கின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கூடுதல் ஆட்களை அழை த்து வந்து 150-க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் குண்டர்கள் தீபக் முன்பு தாக்குதல் நடத்த தயாராக நின்றனர். ஆனால் தீபக் எதற்கும் அஞ்சவில்லை. பின்னர் காவல்துறையினர் பதற்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த னர். ஆனால் இந்த விவகாரத்தில் தீபக் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்துத்துவா குண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. நாடு முழுவதும் ஆதரவு இதுதொடர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் இந்துத்துவா குண்டர்களை புரட்டியெடுத்த “முகமது தீபக் குமார்” என்ற பெயரில் வைரலானது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீபக்கை “இந்தியாவின் நாயகன்” என்று பாராட்டினார். மேலும், “வெறுப்புச் சந்தையில் அன்பைப் பரப்பும் தீபக் போன்றவர்கள் இந்தியாவிற்குத் தேவை” என்று அவர் புகழாரம் சூட்டினார். அதே போல ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், இது ஒரு “உண்மையான இந்தியா” என்று குறிப்பிட்டு செய்தி மூலம் பாராட்டுத் தெரிவித்தது. குறிப் பாக தீபக் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வீடியோ ஒன்றுக்கு 55 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்கள் (Likes) கிடைத்தன. அதில் அவர், “நான் இந்து அல்ல, முஸ்லிம் அல்ல, சீக்கியன் அல்ல, கிறிஸ்துவன் அல்ல. முதலில் நான் ஒரு மனிதன்” என்று பதிவிட்டார். ஆனால் இந்த புகழுக்கு மத்தியில் தீபக் பெரும் பாதிப்புகளையும் சந்தித்தார். இந்துத்துவா குண்டர்களின் மிரட்டலால் உடற் பயிற்சி கூடத்திற்கு வந்த 150 உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. உடற் பயிற்சி கூடத்தின் உறுப்பினர்கள் குறைந்த தால், அந்த இடத்திற்கான மாத வாடகை ரூ. 40,000 மற்றும் வீடு கட்ட வாங்கிய கடனைச் செலுத்த தீபக் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா குண்டர்களின் தொடர்ச்சியான கொலை மிரட்டல்களால், அவரது குடும் பத்தினர் அச்சத்தில் உள்ளனர். சிபிஎம் எம்.பி., இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் நேரில் சென்று தீபக்கைச் சந்தித்து அவரது உடற்பயிற்சி கூடத்தில் உறுப்பினரா கச் சேர்ந்தார். உடற்பயிற்சி கூடத்திற்கான கட்ட ணம் மற்றும் நிதியுதவியை அளித்து,”அந்தத் தொகையைக் கொண்டு ஏழை இளைஞர்க ளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் (தானம்)” என்று கேட்டுக்கொண்டார். அதே போல இந்தியா வின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் தீபக்கிற்கு உதவ முன்வந்துள்ளனர். உடற் பயிற்சி விருப்பம் இல்லாத நபர்கள் கூட, அவருக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் தீபக்கின் ஜிம்மில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக 15 உச்சநீதிமன்ற மூத்த வழக்கறி ஞர்கள், தலா ரூ.10,000 வழங்கி, ஒரு வருட கால உதவித் தொகையை அளித்துள்ளனர். இந்த உதவிகளால் நெகிழ்ச்சி அடைந்த தீபக் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “இன்று நாம் மௌனமாக இருந்தால், நாளை நம் குழந்தைகளும் அதே மௌனத்தையே கற்றுக் கொள்வார்கள். அதனால் எது சரியா னதோ அதற்காக நான் என்றும் நிற்பேன்” என உறுதியுடன் கூறியுள்ளார்.
