tamilnadu

img

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் ஆறுதல் 

திருவாரூர், ஜூலை 7-  திருவாரூர் திலகர் தெருவில் ஞாயிறன்று ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. காட்டுக்காரத் தெரு பகுதியில் நடந்த மற்றொரு தீ விபத்தில் பெரும் சேதம்  அடைந்துள்ளது. இப்பகுதிக்கு நேரில் சென்று சிபிஎம் தலைவர்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். திங்கள்கிழமை திருவாரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள காட்டுக்காரத் தெருவில் கமலா என்பவரது வீட்டிலிருந்து பரவிய தீ, காற்றில் பரவி அடுத்தடுத்து உள்ள வீடுகளும் பரவியது.  இதில், ராஜேந்திரன், செந்தில், மகேஸ்வரி, கமலா, கலாராணி, ராணி, கார்த்திகேயன், சந்தியா, அமலா மற்றும் செந்தில் ஆகியோரது வீடுகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் சங்கத்தின் நகரத் தலைவர் ராஜேந்திரன் வீடும் தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ விபத்தினை அறிந்த சிபிஎம் மாவட்டச்  செயலாளர் டி. முருகையன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, தலைவர் எம்.கே.என்.  அனிபா, பொருளாளர் கே. கஜேந்திரன்,  விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த கோர தீயில் ஆடு, கோழி, மற்றும் இருசக்கர வாகனங்கள் கருகின. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து நகர காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.