tamilnadu

img

எட்டு திக்கிலும் வெற்றி வரும்...! - ஜீவி

சிபிஎம் மும் சிவப்புதான் - அதன்  செயல்களெல்லாம் சிறப்பு தான் பொறுப்பு மிக்க தோழர்களின்  அணிவகுப்பே வகுப்பு தான்  மோடியோட ஆட்சிதான் மோடி மஸ்தான் காட்சிதான்  தெரு கோடியிலே கிடக்குது பார் தேச மக்கள் வாழ்க்கை தான்  வேர்வை துளியை மதிக்கணும் வெற்றி பெற உழைக்கணும் தீர்வை தர வேண்டுமென்றால் தேர்தலில் இந்தியா ஜெயிக்கணும் அல்லாஹ் ராமர் ஒன்னு தான்  அதை அறியாத வாயில் மண்ணுதான்  எல்லோரையும் சமமாய் பார்க்கும் இந்தியாவும் கிங் தான்.  மாநிலம் எல்லாம் வளரணும்  மகிழ்ச்சி விடியல் புலரணும் மத்தியில் ஒரு நல்லாட்சி மலர இந்தியா ஜெயிக்கணும்  தனித்த மரம் தோப்பில்லே  தடைகள் வெல்லா படையில்லே  துணிவு கொள்வாய் தோழனே  தோல்வி இனி நமக்கில்லே  பகை முடிக்க எழுந்திரு  பதாகை உயர்த்தி நடந்திடு  செங்கொடியாம் நம் கொடி  ஜெயிக்க வேண்டும் செயல்படு  அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  ஒரு அரசியல் மாற்றம் பெற்று தரும்  எதிரிகள் எல்லாம் உதிரிகளாக  எட்டு திக்கிலும் வெற்றி வரும்!