tamilnadu

img

திருப்பூரில் சிபிஎம் மாபெரும் உண்ணாவிரதம்

திருப்பூர், மே 17- தமிழகத்தில் 25 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த  ஒரு கோடி பேரின் வாழ்வாதாரமாக இருக்கும் ஜவுளித் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட நூல் விலையைக் குறைக்கத் தேவை யான நடவடிக்கைகளை ஒன்றிய மோடி அரசு உடனடியாக எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. ஜவுளி உற்பத்திக்கு ஆதாரமான நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பஞ்சு, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவும், பருத்தியை அத்தி யாவசியப்  பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும்,  ஊக வணிகப் பட்டியலில் இருந்து பருத்தியை  நீக்கவும், தமிழ்நாடு பருத்திக் கழகம் தொடங்க வும், அதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியும், மே 16, 17  தேதிகளில் ஜவுளித் தொழில் அமைப்புகள்  நடத்திய இரு நாள் வேலை நிறுத்தத்தை ஆதரி த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூரில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில்  செவ்வாயன்று நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை ஏற்றார். சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி வரவேற்றார். இந்த போராட்டத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தொடக்கி வைத்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைத் தலைவர் மைக்கோ வேலுச்சாமி,  சைமா பொதுச் செயலாளர் எம்பரர் வீ.பொன்னு சாமி, நிட்மா தலைவர் அகில் சு.ரத்தினசாமி, திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி யாளர்கள் சங்கச் செயலாளர் ரோபோ ரவி, திருப்பூர் சாயஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன், செயலாளர் முருகசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்புத் தலைவர் அகில் மணி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், நிர்வாகி செந்தில்வேல், திருப்பூர் டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், நிட் காம்பேக்டிங் சங்கச் செயலாளர் வி.ஈஸ்வரமூர்த்தி, பவர்டேபிள் சங்கச் செயலாளர் ஆர்.நந்தகோபால், செக்கிங் அன்ட் அயர்ன் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், கம்ப்யூட்டர் பிரிண்டிங் சங்கத் தலைவர் சிவக்குமார், ஏற்று மதியாளர் சங்கத்தைச் சேர்ந்த கருணாநிதி உள்பட பின்னலாடை தொழில் சார்ந்த அனைத்து முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள், பின்னலாடை சார்பு ஜாப் ஒர்க் தொழில் அமைப்புகளின் நிர்வாகி கள் பங்கேற்று நூல் விலை உயர்வு பிரச்சனை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருக் கும் இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு  உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உள்பட வர்க்க, வெகு ஜன அமைப்புகளின் நிர்வாகிகள் இப்போராட்டத் தில் வாழ்த்திப் பேசினர். பெண்கள் உள்பட ஏறத்தாழ ஆயிரம் பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட னர். நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இந்த போராட்டத்தை மாலையில் நிறைவு செய்து வைத்துப் பேசினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் நன்றி கூறினார்.

;