பள்ளி பாதுகாவலர்களுக்கான ஊதியத்தை மேலாண்மை குழுவே வழங்க வேண்டும்
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 1 - பள்ளி பாதுகாவலருக்கான ஊதி யத்தை பள்ளி மேலாண்மை குழு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98 வது மாமன்ற உறுப்பினர் ஏ.பிரியதர்ஷினி வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் திங்களன்று (ஜூன் 30) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. 98 வது வட்டம் மாமன்ற சிபிஎம் உறுப்பினர் பிரியதர்ஷினி பேசுகையில், பள்ளி பாதுகாவலர், கணினி உதவியாளர் களுக்கு ஊதியத்தை தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலமாக அல்லாமல் பள்ளி மேலாண்மை குழு வின் மூலமாகவே ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உறுப்பினர் பிரிய தர்ஷினி கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த ஆணையர் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றார். முன்னதாக கேள்வி நேரத்தின் போது, 98 வது வட்டத்தில் நீண்ட கால கோரிக்கையான திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர் அதனை சுற்றி யுள்ள 12 நகரில் கான்கிரீட் சாலை துவங்குவதற்கு முன்பு முதலில் மின்சார பணியை தொடங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா அதற்கேற்ப பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். காரல் மார்க்ஸ் சிலை மாமேதை காரல் மார்க்ஸ் சிலையை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கன்னிமரா நூலக நுழைவுவாயிலில் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத் திற்கு மாமன்ற சிபிஎம் உறுப்பினர் விமலா நன்றி தெரிவித்தார். மே மாதம் பள்ளி விடுமுறையின்போதும் பள்ளி உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்க ப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மண்டலம் 1 முதல் 5 வரையுள்ள அரசு பள்ளிகளில் நிதி நெருக்கடியால் 200 மாணவர்களுக்கு ஒரு தூய்மைப் பணியாளர், 10 கழிப்பறைகளுக்கு ஒரு தூய்மைப் பணியாளர் என்று உள்ளதை 300 பேருக்கு ஒருவர் என்ற நிலைக்கு மாற்றியுள்ளதை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மண்டலத்திலும் பிஓவி குப்பை அள்ளும் வண்டி நடை முறையில் உள்ளது. ஆனால் மண்டலம் 4 எல்சிவி குப்பை அள்ளும் வண்டி கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு பதில் அளித்த ஆணையர் பிஓவி மாதிரிதான் செயல்படுத்தப்படும் என்றார். வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி பேசுகையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கப்பணிகளை அங்குள்ள குடியிருப்புகள், வியாபாரி களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகை யில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.