பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு தர்ணாப் போராட்டம் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்பு
மதுரை, ஜூலை 5- பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள் மற்றும் யுத்த வெறியை கண்டித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பாக தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளியன்று நடைபெற்ற இந்த தர்ணாப் போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பாரதி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.என். நவாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் கோ.சந்திரசேகர் ஆகியோர் முன்னி லை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், மாவட்டச் செயலா ளர் என்.கணேசமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் பெனடிக்ட் பர்னபாஸ், பல்சமய உரையாடல் குழு செயலா ளர் பால் பிரிட்டோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்டத் தலைவர் அப்துல் காதர் ஆலிம், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், மாவட்டக் குழு உறுப்பினர் லாவண்யா குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். ரசாக் நன்றி கூறினார். உலக நாடுகளின் கழுத்தை நெரிக்கும் அமெரிக்கா இந்த தர்ணாப் போராட்டத்தில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி பேசுகையில், நாம் இன்று சந்திக்கிற பொருளாதார நெருக்க டிக்கு காரணம் என்ன? உலக அர சியலில் நடக்கும் தலையீடு தான். ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கி னால் 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். அவருக்கு உலகத்தின் மீது என்ன அதிகாரம்? யார் அவர்? உலக மக்களின் தலைவரா? ஆனால், உலக நாடுகளின் கழுத்தை நெரிக்கும் நிலையை உருவாக்கி யுள்ளார். உக்ரைனில் 3 ஆண்டுகளாக நடைபெறும் போர், ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ படைகள் திரளும் போது உருவானது. டிரம்ப் வந்தால் போரை நிறுத்துவேன் என்றார். நம்முடைய பிரதமர் மோடி யும் ‘நாளை பேசுவேன்’ என்று சொல்கிறார். ஆனால், உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்கள் தான் போர் நீடிப்பதற்கான முக்கிய கார ணம். அந்த கனிமங்களில் 50% அமெரிக்காவுக்கே ஒதுக்கப் பட்டுள்ளது. இதுவே எல்லாவற்றுக் கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. பாலஸ்தீனத்தில் இன்று குழந் தைகள், பெண்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. இஸ்ரேல் அரங்கேற்றும் கொடூரங்க ளை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் சொல்வது: “எதிர்ப்பாளர்கள் அணுகுண்டுக்கே தகுந்தவர்கள்!” என்று கூறுகிறார். டிரோன் தாக்குதல் மூலம் படுகொலை ஒரு மருத்துவர், பாலஸ்தீன மக்க ளுக்கு மருத்துவம் பார்த்ததற்காக அவரது மகனை இஸ்ரேல் ராணு வம் டிரோன் தாக்குதல் மூலம் படு கொலை செய்கிறது. தன்னுடைய குழந்தையை இழந்த போதும் அந்த மருத்துவர், “நான் என் மக்க ளுக்கு கடைசி வரை சிகிச்சை அளித்துவிட்டு தான் சாவேன்” என்கிறார். இது மனிதநேயத்தின் ஒளியாகும். 11 வயது சிறுமி முகா மில் இருந்து நேரலை செய்கிறாள் என்பதற்காக அந்த குழந்தையை டிரோன் மூலம் தாக்கி படுகொலை செய்கிறார்கள். தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை, மருந்தில்லை. ஆனால், அந்த குழந்தையை கூட டிரோன் தாக்குகிறது. இது எப்படி ஒரு நாகரிகம்? இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்கள், தங்கள் தலைவர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஈரான் இன்றை க்கு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எதிர்த்துப் போராடி வருகிறது. மக்கள் மனிதநேயத்திற்காக ஒன்றி ணைகிறார்கள். ஆனால் அரசுகள் வல்லரசுகளின் ஆதிக்கத்திற்காக செயல்படுகின்றன. இந்த நிலையை எதிர்த்து நாம் பேச வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். மனித உரிமை, மக்கள் நலன், நம் நாட்டின் பொருளாதார நிலை ஆகியவை உலக அரசிய லால் கட்டுப்படுத்தப்படக் கூடாது. மனிதநேயத்திற்காக குரல் கொடுக்கும் சிறுபான்மை மக்கள் நலக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிலைப்பாட்டை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு முன்னெடுத்து இருக்கிறது. இது ஒரு அரசியல் கட்சி சார்ந்த அமைப்பு அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நன்மாறன் உருவாக்கிய இந்த அமைப்பு, இன்றைக்கு சிறுபான்மை மக்களுக்காகவும், உலகில் பாலஸ்தீனம் போல் பல்வேறு நாடுகளில் நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராகவும் மனிதநேயத்தை பாதுகாக்கவும் மதங்கள், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் பொதுமையாக்கி அவர்களுடைய கோரிக்கைக்காக தொடர்ந்து போரா டுகிறது. தோழர் நன்மாறன் அவர்க ளுடைய லட்சியத்தோடு தொடர்ந்து பயணித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.