tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு சிவகங்கையில் வரவேற்புக் குழு அமைப்பு

சிவகங்கை, பிப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அரு.மோகன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிபிஎம் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, கருப்பு சாமி, ஆறுமுகம், முத்துராம லிங்கபூபதி, மணியம்மா, சேதுராமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காரைக்குடி மூத்த தோழர்கள் சித்திரைவேலு, மாதவன் ஆகியோர் தலா ரூ.50 ஆயிரமும், பேரா.தங்க முனியாண்டி மகள் ஜென்னிமார்க்ஸ், மகன் எயினன் ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேர்த்த பணம் ரூபாய் ஆயிரத்தையும் அகில இந்திய மாநாட்டு நிதியாக மாநிலச் செய லாளர் பெ.சண்முகத்திடம் வழங்கி னர்.  அகில இந்திய மாநாட்டு நிதியாக சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 500ஐ  மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தி டம் வழங்கப்பட்டது.