tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு விளக்கப் பேரவை

சிபிஎம் அகில இந்திய  மாநாட்டு விளக்கப் பேரவை

நாகப்பட்டினம்,  ஆக.3-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு விளக்கப் பேரவை மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு கார்டு வழங்கும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் சனிக்கிழமை அன்று கட்சியின் ஒன்றியச் செய லாளர் பி.எம்.லெனின்  தலைமையில் நடை பெற்றது.  இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிர மணியன், அகில இந்திய மாநாட்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பொன்மணி, ஏ.பால்பக்கிரிசாமி, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதி மார்க்ஸ், முருகவேல், பிரபாகரன், விவசாயி சங்க ஒன்றிய தலைவர் என்.சந்திரசேகரன், எழுத்தாளர் சங்க தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் சுமித்ரா, கிளைச்  செயலாளர்கள் கோபி ஜெகன், ஜி. ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.