கோவில் நில குடியிருப்புகளுக்கு 50% வாடகை குறைப்பு முதல்வருக்கு சிபிஎம் - சிபிஐ - விசிக தலைவர்கள் நன்றி
சென்னை, மார்ச் 5 - தமிழ்நாடு முழுவதும் அறநிலை யத்துறைக்கு சொந்தமான கோவில் இடங்களில் குடியிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான குடும்பங் களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வாடகை குறைப்பை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் தற் போதுள்ள வாடகையை 50 சதவிகி தம் குறைக்கவும், வறுமைக்கோட்டி ற்கு கீழ் உள்ளவர்களுக்கு 75 சத விகிதம் வரை குறைக்கவும் உத்தர விட்டுள்ளார். இந்த உத்தரவு 1.7.2016 முதல் முன் தேதியிட்டும் அமல்படுத்தப் பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களுக்கு அதன் விளைச்சலில் நான்கில் ஒரு பங்கை பெறவும் அரசு அறிவுறுத்தி யுள்ளது. இதனைத் தொடர்ந்து அர சாணை எண் 85 வெளியிடப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறது. இந்த நிலையில், சென்னை தலை மைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வ. செல்வம், பொதுச்செய லாளர் சாமி. நடராஜன், பொரு ளாளர் எஸ். துரைராஜ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் இரா. முத்தரசன், வை. சிவபுண்ணியம், நா.பெரியசாமி, பி.எஸ். மாசிலா மணி மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திரு மாவளவன், வன்னியரசு உள்ளிட் டோர் நன்றி தெரிவித்தனர். மேலும், வாடகைக்குறைப்புக்கு உறுதுணையாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச ருக்கும் நன்றி தெரிவித்தனர்.
