tamilnadu

img

கீழ்வேளூரில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழ்வேளூரில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய குழுவின் சார்பாக, ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஐஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்தையன் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ் பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.என். அம்பிகாபதி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

மாவீரன் பகத்சிங் நினைவு தினம்: 
வாலிபர் சங்கம் கொடியேற்றும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாவீரன்.பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி திருக்கடையூர், டி.மணல்மேடு, பூதனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  இலுப்பூர் கடைவீதியில் சங்கத்தின் கிளைத் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ரஞ்சித் கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.