tamilnadu

பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் தர்ணா

பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் தர்ணா

சேலம், ஆக.14- பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவ டிக்கை எடுக்கக்கோரி, துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள் ளன. பேரூராட்சி மன்றத் தலைவராக  திமுகவைச் சேர்ந்த கவிதா என்பவர்  உள்ளார். இவர் மீது தொடர்ச்சியாக ஊழல் புகார் தெரிவித்து திமுக,  காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 11 பேர் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வர,  சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண் டும் என, ஒரு மாதத்திற்கு முன்பே பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், அதற்கான கூட்டத்தை செயல் அலு வலர் கூட்டவில்லை. இந்நிலையில், புதனன்று காலை தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கபட்டது. பேரூ ராட்சித் தலைவர் கவிதா, செயல் அலுவலர் ஜெசிமா பானு, கவுன் சிலர்கள் பழனிமுத்து, செந்தில்,  ராஜா ஆகியோர் கூட்டரங்கில் காத் திருந்தனர். அதிமுக கவுன்சிலர்கள் 3  பேர் கூட்டத்தை புறக்கணித்தனர். அதனால் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், கூட்டம் மறுதேதி  குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில், பேரூராட்சி அலு வலக நுழைவாயிலில் பேரூராட்சி துணைத்தலைவர் சந்தியா ரஞ்சித் குமார் தலைமையில் திமுகவைச் சேர்ந்த 9 பேர், காங்கிரஸைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 11 கவுன்சிலர் கள் கூட்டத்தை புறக்கணித்து, வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு தர்னாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்  கொண்டுவர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி முழக்க மிட்டனர். பேரூராட்சி செயல் அலுவ லர் ஜெசிமாபானு, தர்ணாவில் ஈடு பட்ட உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். ஆனால், உதவி இயக்குநர் நேரில்  வர வேண்டும் என போராட்டக் காரர்கள் தெரிவித்தனர். இதைய டுத்து, புதனன்று மாலை மாவட்ட  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்  குருராஜ், கைப்பேசி மூலம் போராட் டக்காரர்களுடன் பேசினார். இதை யடுத்து, செயல் அலுவலர் ஜெசி மாபானு, நம்பிக்கையில்லாத் தீர்மா னம் குறித்து ஒருவாரத்தில் நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறு தியளித்தார். அதன்பேரில் போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.