ஊழல் மனித உரிமை மீறல் மட்டுமல்ல மனித குல வளர்ச்சிக்கான எதிரி
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து
ராசிபுரம், ஆக.28- ஊழல் என்பது தனி மனித உரிமை மீறல் மட்டு மல்ல, ஒட்டுமொத்த மக்க ளின் உரிமை மீறலாகும் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் யூசுப் கான் தலைமையிலும் பேராசிரியர்கள் ஆர்.சிவக் குமார், பி. கிருஷ்ணம்மாள் முன்னிலையிலும் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வீ.ராம்ராஜ் பேசியதாவது, கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற் படுத்தப்பட்டது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஒப்பந்த மானது கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 14 முதல் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபை யின் இந்த இரண்டு ஒப்பந்தங் களையும் இந்தியா ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் மனித உரி மைகள் பாதுகாப்புச் சட்ட மும் கடந்த 2013 ஆம் ஆண்டில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மும் இந்தியாவில் இயற்றப் பட்டது. உரிமைமீறல் மனித உரிமைகள் பாது காப்புச் சட்டப்படி வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனி மனித கவுரவம் ஆகியன தனிமனித உரிமைகளாகும். பொது நிதியை ஊழல் மூலம் தனிநபர்கள் அபகரிப்பதால் மக்களுக்கான திட்டங் களுக்கு செலவு செய்ய வேண்டிய அரசின் பணம் திசை திருப்பப்படுகிறது. இதனால், அரசியல், சமூக, பொருளாதார உரிமை களும் சிவில் மற்றும் கலாச் சார உரிமைகளும் பாதிக் கப்படுகின்றன. ஊழல் என்பது தனிமனித உரிமை களுக்கு எதிரான, ஒட்டு மொத்த மக்களின் உரிமைக ளுக்கு எதிரான மீறலாகும். மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் ஊழல், சட்டத்தின் ஆட்சி மீது தாக்குதல் நடத்துவ தோடு மக்களின் வளர்ச் சியை பாதிக்கிறது. சமூகத் தில் சமத்துவமற்ற நிலையை உருவாக்கி மக்க ளின் அமைதியை ஊழல் சீர் குலைக்கிறது. ஊழலை ஒழி க்காமல் மக்களிடையே மகிழ்ச்சியையும் உலகில் அமைதியையும் ஏற்படுத்தி விட முடியாது. ஊழல் தனி மனித உரிமை மீறல் மட்டு மல்ல, மனித குலத்துக்கு எதிராக நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாகும் . லோக்பால், லோக் ஆயுக்தா என்றால் என்ன? ஊழல் தடுப்பு காவல் பிரிவால் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வழக்குகளை 1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப் படி அனைத்து மாவட் டங்களிலும் அமைக்கப் பட்டுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் விசாரிக் கின்றன. பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் உயர் அதி காரிகள் முதல் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழி யர்கள் மீதான ஊழல் புகார் களை விசாரிக்க கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் லோக்பால் அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. இதை போலவே, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அர சின் உயர் அதிகாரிகள் முதல் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசா ரிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது. வேறுபாட்டை புரிந்து கொள்வீர் லோக் ஆயுக்தா என்றால் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பா கும். அனைத்து நீதிமன்றங் களிலும் வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழி முறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். லோக் ஆயுக்தா என்ப தற்கும் லோக் அதாலத் என்ப தற்கும் உள்ள வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். இந்த கருத்தரங்கத்தை திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறி வியல் துறையும் அரிஸ்டாட் டில் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் உதவி பேரா சிரியர் கே. செந்தில்குமார் வர வேற்றார். உதவி பேராசிரி யர் எஸ். ஜெயக்குமார் நன்றி கூறினார்.