tamilnadu

img

மதுரை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா.... கண்காணிப்பில் 3,15,877  பேர்

மதுரை:
மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 19 பேர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். இவர்களோடு தொடர்புடைய 382 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் தொற்று பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகளான மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு, தபால்தந்தி நகர், புறநகர் பகுதியில் எழுமலை, திருமங்கலம், மேலூர் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் 73,396 குடும்பங்களில் உள்ள 3,15.877 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் 500 படுக்கை வசதிகள், பழைய கட்டடத்தில் 200 படுக்கை வசதிகள்,  தீவிர சிகிச்சைப் பிரிவில் 150 படுக்கைகள், தோப்பூர் மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,001 படுக்கை வசதிகள் உள்ளன. 120 வெண்டிலேட்டர்கள் உள்ளன.

மதுரை மாவட்டத்தில் 8,54,384 ரேசன் அட்டைதாரர்களில் 7,74,014 அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டுவிட்டது. 82,088 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்.ஞாயிறன்று மதுரை மாவட்டத்தில் 2,95,159 கண்காணிக்கப்படுவதாக அறிவித்த மதுரை மாவட்ட நிர்வாகம் திங்களன்று 3,15.877 கண்காணிக்கப்படுவதாகவும் அதற்காக சுகாதாரத்துறையின் சார்பில் 902 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

;