இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் மனு
கரூர், ஜூன் 4 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட கள்ளப்பள்ளி, கோரக்குத்தி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் கட்டுமானம், விவ சாயக் கூலி வேலை செய்து வரு கிறார்கள். இவர்கள் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடியிருப்பதற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி தொடர்ந்து பல ஆண்டுகளாக, கட்டு மானத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை மனுவை வழங்கி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபாண்மை நலத்துறை மூலமாக, விசாரணை முடிந்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என கோரிக்கை மனு கொடுத்தவர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கிருஷ்ணராயபுரம் வட்டாட்சி யர், கரூர் மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை. உடனடியாக அனைவருக்கும் இல வச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சி யரை நேரில் சந்தித்து, “இலவச வீட்டு மனைப் பட்டா கோரி ஆண்டுக்கணக் கில் காத்திருக்கும் பயனாளிகளுக்கு விரைந்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்” என்று கோரிக்கை மனுவை வழங்கி, மனைப் பட்டா வழங்க எடுக்கப்பட்ட நடவ டிக்கை குறித்து பேசினர். அப்போது, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளோம். அந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிய உடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார். கோரிக்கை மனு வழங்குவதற்கு கட்டுமானச் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ப.சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சங்க கிளைச் செயலாளர் தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.