tamilnadu

img

டிரம்ப் - மஸ்க் இடையே வெடித்தது மோதல்

டிரம்ப் - மஸ்க் இடையே வெடித்தது மோதல் அம்பலத்திற்கு வரும் ரகசிய குற்றங்கள்

வாஷிங்டன், ஜூன் 6 - “சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்களில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பெயரும் உள்ளது” எனக் கூறி, இவ்வளவு நாளும் டிரம்பின் கூட்டாளியாக இருந்த எலான் மஸ்க் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிற்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்குக்கும் இடையே இருந்து வந்த மோதல் போக்கு கடந்த இரண்டு நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.  எலான் மஸ்க் செலவிட்ட  300 பில்லியன் டாலர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்காக 300 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக எலான் மஸ்க் செலவு செய்தார். இதற் காக திறன் துறை என்ற புதிய துறையை உரு வாக்கி அத்துறையின் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்கை அமர வைத்தார் டிரம்ப். இந்த துறையின் முக்கிய வேலையே அரசின் செலவுகளை குறைப்பது தான். அதா வது நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய பல துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதி களை வெட்டுவதே இத்துறையின் அடிப்படை பணி. இதன்படி கல்வித் துறை, ஆராய்ச்சித் துறை என பல முக்கிய துறைகளுக்கான பல பில்லியன் டாலர்கள் நிதி வெட்டப்பட்டன.  வரிச்சலுகை மசோதாவால் வெடித்த மோதல் இந்த நிதி வெட்டு அத்துறை அமைச்சர்கள், குடியரசுக் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி வந்தது. இந்நிலை யில் தான் ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகைகள் கொண்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குவதாகவும் இது திறன் துறையின் நோக்கத்தை சிதைக்கும் எனவும் மஸ்க் விமர்சித்து வந்தார்.  டிரம்ப் கொண்டு வந்து பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றியுள்ள மசோதா (Big beautiful bill) ஒரு அருவருப்பான மசோதா என மஸ்க் விமர்சித்திருந்தார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக குடியர சுக் கட்சி எம்.பி.க்களுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்த மஸ்க், அந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் எனவும் பேசினார். ஒருவருக்கொருவர்  மாறி மாறி விமர்சனம் இதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் நான் “மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்; எலானுக்கும் எனக்கும் ஒரு சிறந்த உறவு இருந்தது. இனி அது இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று டிரம்ப் பேசினார். இந்த செய்தி வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், “நான் உதவியிருக்காவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோல்வியைத் தழுவி இருப் பார். அவர், நன்றி கெட்டவர்” என எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் விமர்சித்தார்.  மற்றொரு பதிவில், டிரம்பின் வரிகள் இந்த ஆண்டின் முடிவில் அமெரிக்காவை ஒரு மந்தநிலைக்குத் தள்ளும் என்றும் எச்சரித்தார். அதிகாரத்தை வைத்து  பயம் காட்டிய டிரம்ப் இந்த மோதல் முற்றிய நிலையில் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமையன்று எலான் மஸ்கின் நிறுவனங்களுடன் அரசு ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களை நிறுத்தப் போவதாக கூறினார்.  “அமெரிக்காவின் பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்த எளிமை யான வழி உள்ளது. எது என்னவென்றால் எலான் மஸ்க் நிறுவனங்களுக்கான அரசு மானி யங்கள் மற்றும் ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவது தான்” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டார். பதிலுக்கு டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மஸ்க் கூறினார்.  கடும் அடிவாங்கிய டெஸ்லா பங்குகள் இருவருக்கும் மோதல் அதிகரித்த நிலை யில் எலான் மஸ்கின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின்