தலைமை நீதிபதி கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம்
நாகர்கோவில், அக். 9- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயற்சித்த வழக்கறி ஞரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யும் அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் நீதிமன்ற வளாகம் முன்பு வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பரம தாஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அனந்த சேகர், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்கள் பால ஜனாதிபதி, மரிய ஸ்டீபன், வெற்றிவேல் ஆகியோர் பேசினர். வழக்கறிஞர் ஆர். ராதாகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார்.
