tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி இன்று முதலாமாண்டு நினைவு தினம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி இன்று முதலாமாண்டு நினைவு தினம்

ஆயிரக்கணக்கான தோழர்கள் உடல் தானம்

சென்னை, செப். 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினமான செப்டம்பர் 12 அன்று தமிழ கம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் 1000 பேர் உடல் தானம் செய்யவுள்ளனர்.  இதற்கான துவக்க நிகழ்ச்சி, சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினை வகத்தில் காலை 11 மணியளவில் நடை பெறுகிறது. தோழர் சீத்தாராம் யெச்சூரி புகழஞ்சலி மற்றும் தோழர்களின் உடல்தான இயக்கத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், க.பாலபாரதி, மூத்தத் தலைவர் டி.கே.  ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பி னர் கே. சாமுவேல்ராஜ்  உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தில்லியில் நடைபெறும் புகழஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.