தோழர் சாத்தையா காலமானார்
அறந்தாங்கி, ஆக. 31- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா தினையாகுடி - கம்பர்கோவிலைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் சாத்தையா(69) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி ஒன்றியக் குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். கட்சி சார்பாக நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டதால் வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி ஒன்றியக் குழு, அறந்தாங்கி நகரக்குழு, விவசாயிகள் சங்கம், விதொச, வாலிபர் சங்கம் சார்பாக தோழர் சாத்தையா உடலுக்கு, கட்சிக் கொடி போர்த்தி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன் ஆகியோர், தோழர் சாத்தையா மறைவிற்கு மாவட்டக் குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.