tamilnadu

img

தோழர் ஆர்.ஜவஹர் மறைவு : அரசு மருத்துவமனைக்கு உடல்தானம்

தோழர் ஆர்.ஜவஹர் மறைவு : அரசு மருத்துவமனைக்கு உடல்தானம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநிலக்குழு அலுவலக செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய தோழர் ஆர்.ஜவஹர் (78) செவ்வாயன்று காலமானார். கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் உள்ள இல்லத்தில்  இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்,  தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில்  உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தோழர் ஜவஹரின் உடலை மனைவி பெ.தேவகி, மகன் சுர்ஜித் சிங், மகள் கிருத்திகா வாலண்டினா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.  (செய்தி : 5)