தோழர் எம்.வேதையன் நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி, அக், 21- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர் வேயண்ணா என்று அழைக்கப்படும் முதுபெரும் தலைவர் எம். வேதையனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வேதை சாலையில் உள்ள நினைவிடத்தில் நடைபெற்றது. நகரச் செயலாளர் கே. கோபு தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், கே.பி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். சாமிநாதன், ஆறு.பிரகாஷ், நகர் மன்ற துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
 
                                    